உலக வணிக சமூகத்திற்கு சீனா பரந்த புத்தாக்க மேடையை வழங்க முடியும் என்று சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 31ஆம் நாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஏபெக் தலைமை நிர்வாக அதிகாரி உச்சி மாநாட்டில், “உலக வளர்ச்சி மற்றும் செழிப்பை முன்னேற்றுவதற்கு ஆசிய-பசிபிக் பங்காற்றுவது” என்ற தலைப்பிலான உரையில் அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சர்வதேச சூழ்நிலையில் மாற்றங்கள் மற்றும் கொந்தளிப்பு உள்ளதாகவும், உலகம் ஒரு புதிய குறுக்குவழியில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். “நமது தேர்வு,உலகின் எதிர்காலத்திற்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் தொலைநோக்குப் பார்வையுடன் பொறுப்பேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புத்தாக்கப் பணிக்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கவும், மேலும் துடிப்பான மற்றும் நெகிழ்வு தன்மை வாய்ந்த ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு மூலம் உலகிற்கு சிறந்த பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
