சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணைய தலைவருமான ஷிச்சின்பிங், கம்யூனிஸ்ட் கட்சியின் ஜிலின் மாநில கமிட்டி மற்றும் மாநில அரசின் பணி அறிக்கையைக் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறுகையில், புதிய யுகத்தில் சீனாவின் வடகிழக்கு பகுதியில் பன்முகங்களிலும் புத்துயிரூட்டும் பணிக்கான ஏற்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஜிலின் மாநிலத்தில் ஆழமாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் 5 பாதுகாப்பு துறைகளைப் பேணிக்காக்கும் வடகிழக்கு பகுதியின் முக்கிய கடமையை நிறைவேற்றி, உயர் தர வளர்ச்சியில் ஊன்றி நின்று, புதிய வளர்ச்சி சிந்தனையை முழுமையாகவும் சரியாகவும் செயல்படுத்தி, புதிய வளர்ச்சி நிலைமைக்கு ஏற்ப சேவை புரிய வேண்டும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு அளவை மேலும் ஆழமாக்கி, வாய்ப்பைக் கொண்டு முன்னேற்றங்களைப் படைத்து, புத்தாக்கத்தை முன்னெடுத்து, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கக் கட்டுமானத்தில் மேலதிக பங்கு ஆற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.