சீன-ரஷிய நட்புறவு, அமைதி, வளர்ச்சி ஆணையத்தின் 15ஆவது முழு அமர்வு செப்டம்பர் 6ஆம் நாள் ரஷியாவின் விளாடிவுஸ்தோக் நகரில் நடைபெற்றது. இதற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் அவர் கூறுகையில்,
இவ்வாணையம், நிறுவப்பட்ட 28 ஆண்டுகளில், நட்புறவை வெளிப்படுத்தி, ஒத்துழைப்புகளை முன்னேற்றும் இலக்கில் ஊன்றி நின்று, இரு நாட்டுறவுக்குச் சேவை புரிந்து, இரு நாட்டு பொது மக்களுக்கிடையிலான நட்புறவை ஆழமாக்கி வருகின்றது.
இவ்வாணையம், இந்த அமர்வை வாய்ப்பாக கொண்டு, இரு நாட்டு மக்களுக்கிடையிலான பரிமாற்ற பாலமாக செயல்பட்டு, புதியயுகத்தில் இரு நாட்டு நட்புறவின் அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறினார்.