ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் வாலென்சியா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தற்போது கடுமையான கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 63 பேர் பலியாகியுள்ள நிலையில் பல கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்துள்ளது. அந்த நாட்டில் ஏற்பட்ட மிக அபாயகரமான தேசிய பேரிடர்களுள் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
நேற்று பெய்த மழையால் கார்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில் மரங்கள் வேரோடு பல்வேறு இடத்தில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு தெருக்களிலும் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மிக மோசமான கனமழை பெய்த நிலையில் பலர் காணாமல் போன நிலையில் மறுநாள் புதன்கிழமை உயிரிழந்தனர். மேலும் தொடர்ந்து அந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.