2023ஆம் ஆண்டு சொங்குவான்சுன் மன்றத்தின் மகளிர் புத்தாக்கக் கருத்தரங்கு

 

2023 ஆம் ஆண்டு சொங்குவான்சுன் மன்றத்தின் மகளிர் புத்தாக்கக் கருத்தரங்கு மே 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவரும், அனைத்து சீன மகளில் சம்மேளனத்தின் தலைவருமான ஷென்யூயூ உரைநிகழ்த்தினார். அப்போது, உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத்தின் சுயநிர்ணயத்தையும் சுயவலிமையையும் சீனா நனவாக்குவது நாட்டின் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த நவீனமயமாக்கக் கட்டுமானத்திற்கு மிகவும் முக்கியம் என்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் கருத்தை அவர் வலியுறுத்தினார்.
இக்கருத்தரங்கில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெண் அறிவியலாளர்கள் உரைநிகழ்த்தி, அவை தொடர்பாக விவாதித்தனர். அதோடு, பெண் அறிவியலாளர்கள் தலைமையில் முக்கிய அறிவியல் தொழில் நுட்பத் திட்டப்பணிகளும் இதில் வெளியிடப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author