டாடா குழுமம், விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவின் வெகுமதி திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
இந்த புதிய லாயல்டி வெகுமதிகள் திட்டம் மகாராஜா கிளப் என்று அழைக்கப்படும்.
இன்று தான் விஸ்தாராவின் கடைசி நாளாகும். நாளை முதல் அது ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும்.
விஸ்தாரா – டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு கூட்டாக சொந்தமானது.
குழுமத்தின் விமான வணிகத்தை ஒருங்கிணைப்பதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட உள்ளது.