ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி நக்கீரன் ஆசிரியர் கோபால் நாக்கை அறுப்பேன் என்று கூறினார்.
இது காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் காவல்துறையினர் ஓம்கார் பாலாஜியை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் தமிழக முழுவதும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது தான் கைதுக்கான காரணம் என்று கூறப்படுகிறது.