பிரேசில் ஒளிபரப்பப்படும் ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சி

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரேசில் அரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, 20 நாடுகள் குழு தலைவர்களின் 19ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பிரேசிலில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் எனும் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதி, உள்ளூர் நேரப்படி நவம்பர் 17ஆம் நாள் தொடங்கி, பிரேசில் நாட்டின் பல முக்கிய ஊடகங்களில் போர்ச்சுகல் மொழியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன.

மனிதக் குலத்தின் பொது எதிர்காலச் சமூகம், பண்பாட்டுத் தொடர்ச்சி மற்றும் புத்தாக்கம், உயிரின பல்வகைமை பாதுகாப்பு, நாகரிக பரிமாற்றங்கள் மற்றும் ஒன்றுக்கு ஒன்று கற்றல் முதலிய கருப்பொருள்களில் இந்நிகழ்ச்சி கவனம் செலுத்தியுள்ளது.

ஷிச்சின்பிங்கின் தலைசிறந்த பரந்த அரசியல் அறிவுத்திறமை, ஆழ்ந்த மனிதநேய உணர்ச்சி மற்றும் பரந்த வரலாற்று மற்றும் உலகக் கண்ணோட்டத்தை இந்த நிகழ்ச்சி அதிசிறப்பாக வழங்கி, சீனப் பாணி நவீனமயமாக்கலின் பண்பாட்டு அடித்தளத்தைப் பார்வையாளர்களுக்குக் காட்டுகிறது.

You May Also Like

More From Author