கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்போட்டான ஜெமினி ஏஐ, முதுமை பற்றிய விவாதத்தின் போது மிச்சிகன் மாணவர் ஒருவருக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் 29 வயது மாணவர் விதான் ரெட்டி, ஜெமினியிடம் வீட்டுப்பாட உதவியை நாடினார்.
பொருத்தமான தகவலை வழங்குவதற்குப் பதிலாக, சாட்போட் ஒரு ஆபத்தான செய்தியுடன் பதிலளித்துள்ளது.
அதில், விதான் ரெட்டியை நேரம் மற்றும் வளங்களை வீணடிப்பவர் என்று விமர்சித்து, தயவுசெய்து இறந்துவிடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளது.
ஜெமினி ஏஐ’யின் இந்த ஆக்ரோஷமான பதில் ரெட்டியையும், உரையாடலின் போது உடனிருந்த அவரது சகோதரி சுமேதாவையும் ஆழமாக உலுக்கியது.