உலகம் இனி என்னவாகும் குழந்தையை பெற்றெடுக்கும் ரோபோ தாய் “CAT GIRL’ !

Estimated read time 1 min read

இதுவரை மனிதர்கள் ரோபோவை உருவாக்கிக் கொண்டிருந்த காலம் போய் இனி ரோபோ மனிதனை பெற்றெடுக்கும் காலம் வந்துவிட்டது. இதைக் கேட்டு நீங்கள் ஆச்சர்யப்படலாம். இன்னும் கேட்டால் அதிர்ச்சியடையலாம். அதுதொடர்பான தகவலை தற்போது பார்க்கலாம்..!

முன்பெல்லாம் ரோபோக்கள் சிறுவர்கள் வைத்து விளையாடும் பொம்மைகளைப் போல்தான் உருவாக்கப்பட்டன. கால்களுக்கு பதில் சக்கரங்களைப் பயன்படுத்தி ஏதோ ரிமோட் கார் போல இயங்கிக் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் வெறும் மெஷின்களாக இருந்த ரோபோக்கள் நாம் சொல்லும் வேலையை அல்லது PROGRAM செய்யப்பட்ட பணியை மட்டுமே மேற்கொண்டன. மற்றபடி தாமாகவோ புதிதாகவோ அவை ஏதும் செய்யாது.

ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமான பிறகு ரோபோக்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முதல்படியே ரோபோக்கள்தான். ARTIFICIAL-ஆக உருவாக்கப்படும் INTELLIGENCE-ஐ ரோபோக்களுக்குத்தானே கொடுக்க முடியும்? அதனால் முதலில் அவற்றை உருவாக்கிவிட்டு பிறகு AI-ஐ உருவாக்கினார்கள். எனினும் தற்போது ரோபோக்கள் மட்டுமின்றி கணினி, செல்போன் உள்ளிட்ட பல்வேறு கருவிகளில் AI அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் வெறும் ட்ரைலர்தான் என்று சொல்லுமளவுக்கு MAIN PICTURE-ஐ உருவாக்கியிருக்கிறார் SPACE X நிறுவனத்தின் உரிமையாளரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க்.

‘எந்திரன்’ படத்தில் ரஜினிகாந்த் உருவாக்கும் சிட்டி ரோபோ பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும். ஆனால் எலான் மஸ்க் உருவாக்கியிருக்கும் ‘CAT GIRL’ என்ற ரோபோ குழந்தையையே பெற்றுக்கொடுக்கும். 5 புள்ளி 68 அடி உயரமும், 123 POUND எடையும் கொண்ட ‘CAT GIRL’ வீட்டை சுத்தம் செய்யும், சமைக்கும், நம்மோடு உரையாடும். மனிதனுக்கு இருப்பதைப் போன்ற முகத்தையும் கைகளையும் கொண்ட ‘CAT GIRL’-ன் உருவத்தையும் குரலையும் நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாம். நல்ல குணங்கள் மற்றும் கீழ்ப்படியும் தன்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ள ‘CAT GIRL’-க்கு எதிர்மறை எண்ணங்கள் கிடையாது.

எல்லாவற்றுக்கு மேலாக செயற்கை கருப்பையுடன் உருவாக்கப்பட்டுள்ளதால் ‘CAT GIRL’-ஆல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். பெண்ணின் கருப்பையில் இருப்பதைப் போலவே குழந்தை வளர்வதற்கு தேவையான திரவங்கள் ‘CAT GIRL’-ன் கருப்பையிலும் இருக்கும். ரோபோவின் வயிற்றில் குழந்தை வளரும் போது அதன் எடை, ரத்த அழுத்தம், இதய துடிப்பின் வேகம், உடல் வெப்பம் போன்றவற்றை நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும். மேலும், 300 விதமான மரபணுக்களைக் கொண்டு குழந்தையின் புறத்தோற்றம், புத்திசாலித்தனம் போன்றவற்றை நமக்கு பிடித்தபடி மாற்றிக் கொள்ளலாம்.

இதன்மூலம் மரபுவழி நோய்கள் அடுத்த தலைமுறைக்கு பரவாமல் தடுக்க முடியும். ஒரு லட்சத்து 40 ஆயிரம் டாலர் விலை கொண்ட ‘CAT GIRL’ ரோபோவின் உற்பத்தி 2026-ஆம் ஆண்டில் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரைந்து மாதங்கள் கருவோடு என்னைத் தாங்கி நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா… ஈறேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான்பட்ட கடன் தீருமா? என்று அம்மா மேல் அன்பை பொழியும் சமூகத்தில், தாயே தேவையில்லை… ஒரு மெஷின் பிள்ளை பெற்றுத்தரும் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

ஆணும் பெண்ணும் உடலால் இணையாமல் உயிரை உருவாக்க முடியும் என்பதை அறிவியல் வளர்ச்சி என்று ஏற்றுக்கொண்டதைப் போல் இதையும் எடுத்துக்கொள்ளலாமா?

குழந்தை பெற முடியாமலும் வாடகைத் தாயை ஏற்க மனமில்லாமலும் இருக்கும் பலருக்கு இது வரப்பிரசாதம் என்று கருதலாமா?

ஆணும் பெண்ணும் தம்பதியாய் வாழ ஆதாரமாய் இருக்கும் குழந்தையை ஒரு ரோபோ பெற்றெடுக்கும் என்றால் எதிர்காலத்தில் திருமணங்கள் நடைபெறுமா? ஏதோ DRESS தைப்பதைப் போல எப்படி வேண்டுமானாலும் குழந்தையை உருவாக்க முடியும் என்பது வரமா? சாபமா?

நமது விருப்பத்துக்கு ஏற்ப குழந்தையை உருவாக்குகிறோம் என்றால் எதிர்கால தலைமுறையின் ORIGINALITY-யை அழித்ததுபோல் ஆகாதா? அல்லது குற்றம், குறைகள் அற்ற… நோய் நொடி இல்லாத குழந்தையை உருவாக்குவதன் மூலம் நேர்மறையான அடுத்த தலைமுறையை படைக்கப்போகிறோம் என்றெண்ணுவதா?

ரோபோ பெற்றெடுக்கும் குழந்தை மனிதர்களுடன் எப்படிப் பழகும்? எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும்???

இப்படி பல கேள்விகளை எழுப்பியிக்கிறது ‘CAT GIRL’ ரோபோ…!

Please follow and like us:

You May Also Like

More From Author