சீன அரசவையின் சுங்கவரி ஆணையம் டிசம்பர் 21ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் சில வணிகப் பொருட்களின் மீதான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சுங்கவரி சரிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல், 1010 வணிகப் பொருட்களின் மீது, அதிக முன்னுரிமையுடன் கூடிய நாட்டின் வரி விகிதத்தை விட குறைவான தற்காலிக இறக்குமதி வரி விகிதத்தை சீனா நடைமுறைப்படுத்த உள்ளது. இதனிடையே, உயர் தூய்மை அலுமினியம் மீதான ஏற்றுமதி சுங்கவரி குறைக்கப்படும்.
உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பைத் தொடர்ந்து முன்னேற்றும் விதம், குறிப்பிட்ட நாடுகள் அல்லது பிரதேசங்களுடன் சீனா உருவாக்கியுள்ள தாராள வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சலுகையுடன் கூடிய வர்த்தக ஏற்பாடுகளின்படி, 2024ஆம் ஆண்டு, 20 உடன்படிக்கைகளின் கீழ், 30 நாடுகள் அல்லது பிரதேசங்களிலிருந்து வரும் சில வணிகப் பொருட்களின் மீது உடன்படிக்கைக்குரிய வரி விகிதம் விதிக்கப்படும். தவிரவும், சீனா-நிக்கராகுவா தாராள வர்த்தக உடன்படிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நாள் நடைமுறைக்கு வருவதோடு, வரிக் குறைப்பும் மேற்கொள்ளப்பட உள்ளது.