சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ டிசம்பர் 20ஆம் நாள் பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் என்ரிக் ஏ. மானலோவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
வாங் யீ கூறுகையில், தற்போது சீன-பிலிப்பைன்ஸ் உறவு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தரப்பு தற்போது வரையிலான கொள்கை நிலைப்பாட்டை மாற்றி, வாக்குறுதியை மீறியதோடு, கடற்பரப்பில் பிரச்சினைகளைத் தூண்டி, சீனாவின் சட்டப்பூர்வமான உரிமைகளுக்கு தீங்கு விளைவித்துள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய கடல் சூழ்நிலையை உரிய முறையில் கையாண்டு நிர்வகிப்பது முதன்மை கடமை. கடலில் நிலைப்புத்தன்மையைக் கூட்டாகப் பேணிக்காக்கும் வகையில், பேச்சுவார்த்தையின் மூலம் கருத்து வேற்றுமையைத் தீர்க்கச் சீனா எப்போதும் பாடுபட்டு வருகின்றது.
பிலிப்பைன்ஸ் இந்நிலைமையை தவறாக மதிப்பிட்டு, தன்னிச்சையாகச் செயல்பட்டால், சீனா தனது உரிமையைப் பேணிக்காத்து, உறுதியாக பதிலளிக்கும் என்றார்.
சீனாவுடனான பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, கடல் பிரச்சினை குறித்து இரு தரப்பு தொடர்பு முறைமையைப் பயன்படுத்தி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிலிப்பைன்ஸ் விரும்புகின்றது என்று மானலோ கூறினார்.