சென்னை அம்பத்தூரில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அந்த நபர், இயந்திரத்தின் அடிப்பகுதியை கைகளால் உடைத்து உள்ளே இருக்கும் பணத்தை திருட முற்பட்டுள்ளார்.ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த நபர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அலாரம் ஒலித்ததன் அடிப்படையில், வங்கி கிளை மேலாளர் தகவல் கொடுக்க, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் , நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.