லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில், நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இது தொடர்பாக, படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இது தொடர்பாக கருத்து பேசிய லைகா புரொடக்ஷன்ஸ் பொது மேலாளர் தமிழ் குமரன், படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கான அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம் என்றார்.
வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.