பில்லியனர் தொழில்முனைவோரும், தனியார் விண்வெளி வீரருமான ஜாரெட் ஐசக்மேன், நாசாவை வழிநடத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
செனட் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தால், ஐசக்மேன் அதன் வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தில் விண்வெளி ஏஜென்சியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வார்.
41 வயதான டிராகன் இன்டர்நேஷனல் நிறுவனர் மற்றும் ஷிஃப்ட்4 நிறுவனத்தின் சிஇஓவான ஜாரெட் ஐசக்மேன், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தனனை இந்த பதவிக்கு பரிந்துரை செய்ததற்காக டிரம்பிறகு நன்றி தெரிவித்தார்.
விண்வெளி ஆய்வில் அமெரிக்காவின் பங்கை முன்னேற்றுவதாக அவர் உறுதியளித்தார். ஐசக்மேன் கடந்த செப்டம்பரில் ஐந்து நாள் விண்வெளி சுற்றுப்பாதை போலரிஸ் டான் திட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார்.