புதிய சீஸனின் ஆரம்பம்; மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்  

Estimated read time 0 min read

மகாராஷ்டிர மாநில முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வியாழக்கிழமை (டிசம்பர் 5) மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றார்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஃபட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றதையொட்டி, ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர்.
மஹாயுதி தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜேபி நட்டா மற்றும் பிற பாஜக தலைவர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இவர்களுடன் ஷாருக்கான், சல்மான் கான், மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆனந்த் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author