சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 11ஆம் நாள் கானா குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான் டிராமணி மகாமாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில் ஷிச்சின்பிங், கானா குடியரசு ஆப்பிரிக்காவிலுள்ள சீனாவின் முக்கிய நெடுநோக்கு கூட்டாளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளுக்குமிடையே நீண்டகால உறுதியான நட்புறவு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகிறது.
பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை இரு நாட்டுகள் மேற்கொண்டு நிறைய சாதனைகளைப் படைத்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
சீன-கானா உறவில் தான் பெரும் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஷிச்சின்பிங், அரசுத் தலைவர் மகாமாவுடன் இணைந்து பாரம்பரிய நட்புறவை மேலும் வளர்த்து அரசியல் ரீதியிலுள்ள ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை ஆழமாக்க விரும்புவதாகவும், இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டாளியுறவின் ஆழமான பயனுள்ள வளர்ச்சியை முன்னேற்றி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.