சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 10ஆம் நாள், மொரிஷியசின் புதிய அரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள தாரம் கோகுலுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், மொரிஷியஸ் ஆப்பிரிக்காவில் சீனாவின் முக்கிய கூட்டாளியாக விளங்குவதைச் சுட்டிக்காட்டிய ஷிச்சின்பிங், இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாட்டுறவு நெடுநோக்குக் கூட்டாளியுறவாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு தரப்புறவின் வளர்ச்சியில் தான் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ள ஷிச்சின்பிங், மொரிஷியசின் புதிய அரசுத் தலைவருடன் இணைந்து, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற பெய்ஜிங் உச்சிமாநாட்டின் சாதனைகளைச் செயல்படுத்தி, இரு தரப்புகளுக்கிடையிலான பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவாக்கி, இரு நாட்டுறவு சார்ந்த முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.