‘கடவுளே அஜித்தே’ கோஷத்தால் டிடிவி தினகரன் அதிர்ச்சி!

Estimated read time 1 min read

திருப்பூரில் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் ’கடவுளே அஜித்தே’ என கோஷம் எழுப்பினர்.

LTTV.தினகரன் அவர்களினன் விழாவில் கடவுளே அஜித்தே 🔥🔥🔥🔥#Ajithkumar𓃵 #VidaaMuyarchi#GoodBadUgly pic.twitter.com/1kYIva3W13— Natarajan (@natarajan333) December 8, 2024

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்துக்கு அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் புது ஸ்டைலில் அலப்பறை செய்துவருகின்றனர். தியேட்டர்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுளே அஜித்தே’ எனக் கும்பலாகக் கூச்சலிட்டு அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

இந்நிலையில் திருப்பூரில் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.டி.வி. தினகரன், பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் ’கடவுளே அஜித்தே’ என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடக்கின்றது என்று புரியாமல் பேச்சை நிறுத்திய டிடிவி தினகரன், நிர்வாகிகளிடம் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என கேட்டார்.

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை தெரிந்துகொள்ள அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும் கவன ஈர்ப்பு மந்திரம்தான் என நிர்வாகிகள் டிடிவி தினகரனுக்கு விளக்கம் அளித்தனர். விசயம் என்ன என்று கேட்டறிந்த பின்னர் மீண்டும் பேச்சை தொடங்கியுள்ளார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author