மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தையுடன் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், மலைமீதுள்ள 6 -வது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலிலும்,இதனைத்தொடர்ந்து, பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்றும் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது, கருப்பணசாமிக்கு அரிவாள் காணிக்கையாக வழங்கினார். இதனிடையே, நடிகர் சிவகார்த்திகேயனுடன் பொதுமக்கள் பலர் ஃசெல்பி எடுத்தும், போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.