சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான டொ லாமுடன் ஆகஸ்ட் 19ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
டொ லாம் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதற்கு ஷிச்சின்பிங் வரவேற்பு தெரிவித்து வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகளைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், உங்களுடன் சீரான பணி உறவு மற்றும் தனிப்பட்ட நட்புறவை வளர்க்க விரும்புகிறேன். உங்களுடன் சேர்ந்து சீன-வியட்நாம் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை மேலும் ஆழமாகவும் பயனுள்ளாதாகவும் முன்னெடுப்பதற்குத் தலைமை தாங்க விரும்புகிறேன். அண்டை நாடுகளுடனான தூதாண்மையுறவுகளில் சீனா, வியட்நாமை எப்போதும் முக்கியமாகக் கருத்தில் கொள்ளும். வியட்நாம், கட்சியின் தலைமையில் ஊன்றி நின்று சொந்த நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய சோஷலிய பாதையில் முன்னேறிச் செல்வதற்கும், சீர்திருத்தம், திறப்பு மற்றும் சோஷலிய நவீனமயமாக்க லட்சியத்தை ஆழமாக முன்னேற்றுவதற்கும் சீனா ஆதரவளிப்பதாகவும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.