2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷேன் ஹாய்சியுங், சி.ஜி.டி.என், சீன வானொலி நிலையம் மற்றும் இணையம் வழியாக வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்குப் புத்தாண்டுரை நிகழ்த்தினார்.
அவர் முதலில் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டில், சீனா உலகத்துடன் இணைந்து முன்னேறி வந்தது. பலவித பண்பாடுகளுக்கிடையேயான பரிமாற்றத்தை சீன ஊடகக் குழுமம் தொடர்ந்து முன்னேற்றுவதோடு, லென்ஸ் மற்றும் எழுத்து மொழியில் உலகில் மனத்தை தொடும் எண்ணற்ற இன்பங்களைப் பதிவு செய்வதில் ஈடுபட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டில்,” சிந்தனை, கலை மற்றும் தொழில் நுட்பம் கூடுதல்”என்ற புத்தாக்கம் ரீதியான முறையில் சீன ஊடகக் குழுமம் மேலும் உயர் நிலையில் வளர்ந்து வந்தது. ஷிச்சின்பிங்கிற்கு பிடித்த பழமொழி எனும் சிறப்பு நிகழ்ச்சியின் 2ஆவது பகுதி பல மொழிகளில் உலகளவில் உள்ள 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
பலவித கருப்பொருட்களை கொண்ட ஊடகக் கருத்தரங்குகள், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் மற்றும் உலகம் எனும் உலகளாவிய ஊடக நிகழ்ச்சி, நாகரிகங்களின் வழி ஒரு பயணம் எனும் உலகளாவிய பயணக் கண்காட்சி ஆகியவற்றைச் சீன ஊடகக் குழுமம் நடத்தியது. மேலதிகமான சர்வதேச நண்பர்கள் சீனாவின் கருத்துக்களை பொரிந்து கொள்வது, ஒப்புகொள்வது, ஆதரவளிப்பது ஆகியவற்றுக்கு இவை ங்காற்றியுள்ளன என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், 191ஆவது வெளிநாட்டு கிளை நிலையத்தைக் கட்டியமைத்து, 67 ஆண்டுகளிலும் பிரதேசங்களிலும் ஒளிபரப்பு வலைப்பின்னலை உருவாக்கியுள்ளது. CGTN யின் ரசிகள் எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டியுள்ளது. உலகில் முக்கிய சம்பங்கள் கிகழும்போது அதனை உடனுக்குடன் வழங்குவதில் சீன ஊடகக் குழுமம் முன்னணியில் வகிக்கிறது.
நேயர்களுக்கு தலைச்சிறந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவது எமது நோக்கமாகும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், 2024ஆம் ஆண்டு, சீனாவின் சந்திர நாட்காட்டின்படி டிராகன் ஆண்டாகும். டிராகன், சீன நாகரிகத்தின் மரபு செல்வமாகவுள்ளது. டிராகன் ஆண்டில் சீன மக்கள், சீன மக்கள் குடியரசின் 75ஆவது ஆண்டு நிறைவை வரவேற்க உள்ளனர்.
புத்தாண்டில் சீன ஊடகக் குழுமம் பேரெழுச்சியுடன் உலகிற்கு மேலதிக சுவையான சீனாவின் கதைகளையும் உலகின் கதைகளையும் கூறி, மனிதக்குலத்தின் நவீன வளர்ச்சியைப் பதிவு செய்து, புதிய வசந்தக்காலத்தை கூட்டாக வரவேற்கும் என்று ஷென் ஹெய்சியோங் தெரிவித்தார்.