சீன-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் 24வது பேச்சுவார்த்தை டிசம்பர் 7ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மிஷேல், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வன்டெர்லேன் அம்மையார் ஆகியோருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சந்தித்துரையாடினார்.
இரு தரப்பின் தலைவர்கள், சீன-ஐரோப்பிய உறவு தொடர்பான நெடுநோக்கு பிரச்சினைகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு முதலியவை குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், ஒத்த கருத்துகளுக்கு வந்துள்ளனர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஐரோப்பிய விவகாரப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சீன-ஐரோப்பிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு மற்றும் ஒத்துழைப்பில் ஊன்றி நிற்க வேண்டும் என்று சீனா கருதுகிறது. நிலையான சீன-ஐரோப்பிய கூட்டாளியுறவை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய தரப்பு தெரிவித்தது.
மேலும், இரு தரப்பின் பயன்தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தொடர்ந்து ஒன்றுக்கொன்று திறப்புக் கொள்கையுடன், கூட்டு வெற்றி பெற இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தன என்று தெரிவித்தார்.