நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்வட கம்பியின் மீதேறி மின் இணைப்பை சரிசெய்யும் மின்வாரிய ஊழியரின் வீடியோ வெளியாகி பாராட்டுகளை பெற்றுள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆங்காங்கே மரம் சரிந்து விழுந்ததில் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலையில், சிவகாமி புரம் அடுத்த புதுகுளம் அருகே கனமழை காரணமாக மின் கம்பி மீது வாகைமரம் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாரித்தங்கம் என்ற ஊழியர் தனது உயிரையும் பொருட்படுத்தாது மின்வட கம்பியின் மீதேறி மின் இணைப்பை சரி செய்தார்.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், மாரித்தங்கத்தை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.