மேட்டூர் அணை! : விரைவில் முழு கொள்ளளவை எட்டும்!

Estimated read time 0 min read

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், அணை விரைவில் அதன் முழு கொள்ளளவை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 148 கன அடியாக உள்ளது. கனமழையால் டெல்டா மாவட்டங்களில் நீர் தேவை குறைந்த நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 118 அடியை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணை விரைவில் அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author