பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்திய ராணுவம் நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல், பாகிஸ்தானை திடுக்கிட செய்துள்ளது.
“போர்கால ஒத்திகை” என வெளியிடப்பட்ட அறிவிப்பால் பாகிஸ்தான் ஏமாற, இந்தியா மே 7 நள்ளிரவில் விமானப்படையின் மூலம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை துவங்கியது.
இந்திய அரசால் நாடு முழுவதும் “போர் ஒத்திகை” என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் இதனை ஒரு பொதுவான ராணுவ இயக்கமாகவே எண்ணியது.
இதை சாமர்த்தியமாக பயன்படுத்தி, இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது.
லெஃப்ட்-ல இண்டிகேட்டர்,ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது தாக்குதல்
