சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், பெலாரஸ் அரசுத் தலைவர் லுகாஷென்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசு தலைவராக மீண்டும் பதவி ஏற்றதையடுத்து லுகாஷென்கோவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.
சீனாவும் பெலாரஸும் நல்ல நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன. ஒன்றுக்கு ஒன்று நம்பத்தக்க முறையில் இரு தரப்புறவை கையாண்டு வருகின்றன. நெடுநோக்கு மற்றும் நீண்டகால பார்வையுடன் இரு தரப்புகளின் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும். பெலாரஸுடன் இணைந்து, இரு நாட்டுறவு மற்றும் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை தூண்ட வேண்டும். ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற கட்டுகோப்புகளிலுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, மேலாதிக்கவாதத்தை எதிர்த்து, சர்வதேச நியாயத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
சீனாவின் மாபெரும் ஆதரவு மற்றும் உதவிக்கு லுகாஷென்கோவ் நன்றி தெரிவித்தார். சர்வதேச விவகாரத்தில், பல தரப்புவாதத்தை சீனா பேணிக்காப்பது, உலகத்திற்கு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது என்று லுகாஷென்கோவ் தெரிவித்தார்.