மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ: பூரணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம்.
கோவை தெற்கு: மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாரணபுரம்.
புதுக்கோட்டை: ரெகுநாதபுரம் சுற்றுப்புறம், கறம்பக்குடி சுற்றுப்புறம், நெடுவாசல் சுற்றுப்புறம்.
சேலம்: சேலூர், குருச்சி, அபிநவம், கே.புதூர்.