2024ஆம் ஆண்டின் நவம்பர் 30ஆம் நாள் சீனாவில் எண்ணியல் பொருளாதாரத்தின் முக்கிய தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 45 இலட்சத்து 74 ஆயிரத்தை எட்டியது.
2023ஆம் ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடும்போது இது 17.99 விழுக்காடு அதிகம். வேகமான வளர்ச்சிப் போக்கு காணப்பட்டுள்ளது என்று சீனச் சந்தை கண்காணிப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தொழிற்துறை வகையைப் பார்த்தால், சீனாவில் எண்ணியல் தொழில்நுட்ப பயன்பாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 21 இலட்சத்து 66 ஆயிரத்து 900யை எட்டியது. எண்ணியல் கூறுகளால் இயக்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 62 ஆயிரத்து 500யை எட்டியது. எண்ணியல் தயாரிப்பு சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 36 ஆயிரத்து 300 ஆகும். எண்ணியல் தயாரிப்பு உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 8 ஆயிரத்து 200 ஆகும். 2023 ஆம் ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடும்போது முறையே 17.60 விழுக்காடு, 19.64 விழுக்காடு, 16.70 விழுக்காடு மற்றும் 8.92 விழுக்காடு அதிகரித்துள்ளது.