பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தது.
கிராமடோ நகர் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 10 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், வீட்டில் இருந்த இருவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.