சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) வெளியிட்டுள்ள சமீபத்திய உலக தரவரிசையில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது 1972க்குப் பிறகு, முதல் முறையாக தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் 2020 மற்றும் 2024இல் பதக்கங்களை வென்ற பிறகு வந்துள்ளது.
தரவரிசையில் நெதர்லாந்து மொத்தம் 3,267 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
எஃப்ஐஎச் ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, யூரோ ஹாக்கி சாம்பியன்ஷிப் மற்றும் எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக்கை 2023ல் வென்ற நெதர்லாந்து தரவரிசையில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இங்கிலாந்து 3,139 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெல்ஜியம் 3,124 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி 3,066 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.