இந்திய மாநிலங்களவையில் இந்திய பயணிகளின் பாஸ்போர்ட் தரவரிசைகள் குறித்து விவரங்களை வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர் கீர்த்தி பரதன்சிங் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளார்.
இந்த எழுத்துப்பூர்வமான பதிவில் கூறியிருப்பதாவது, பாஸ்போர்ட்டுகள் தரவரிசை வழங்கும் பட்டியலில் தனியார் நிறுவனங்களும் உள்ளன. இந்திய அமைச்சகத்துக்கு கிடைத்த தகவலின் படி இந்திய பாஸ்போர்ட் 26 நாடுகள் விசா இல்லாத நுழைவை அனுமதிக்கின்றனர். மேலும் 40 நாடுகள் “ஆன் அரைவல்” என்ற வசதியை வழங்கியுள்ளது.
இந்த “ஆன் அரைவல்” வசதி இந்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்தியா நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவுகளில் உள்ள மக்களுக்கு குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு விசா இல்லாத அனுமதியை வழங்கியுள்ளது.
“ஆன் அரைவல்” விசா பெரும் நாடுகளின் வெளியுறவு அமைச்சக பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாவது, 58 நாடுகளுக்கு இ- விசாவை பயன்படுத்தியும் பயணிக்கலாம் என கூறியுள்ளது.
ஆனால் இந்த இ-விசாவை பயணிகள் அவ்வபோது சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ருந்தது.