காசா பிரதேசத்தைப் பன்முகங்களிலும் கைப்பற்றுவது பற்றிய இஸ்ரேல் தலைமையமைச்சரின் கூற்று, சர்வதேச சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 86.6 விழுக்காட்டினர் இந்தக் கூற்றை உறுதியுடன் எதிர்ப்பதோடு, இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்தி, காசா பிரதேசத்தில் மோதலை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இஸ்ரேல் தலைமையமைச்சரின் இக்கூற்று சர்வதேச சமூகத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இது பற்றி கருத்துகளை வெளியிட மறுத்தது. காசாவில் மனித நேய நெருக்கடிக்கான துணைக் குற்றவாளியாக அமெரிக்கா திகழ்கிறது என்று 92.9 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
