பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை (Rich Dad Poor Dad) என்ற புத்தகத்தின் பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, வரவிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி குறித்து எச்சரித்துள்ளார்.
அவர் தனது சமீபத்திய எக்ஸ் பதிவில், “ஐரோப்பா, சீனா, அமெரிக்கா கீழே போகிறது. வீழ்ச்சி முன்னால்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிராந்தியங்களுக்கான முக்கிய நிதி சவால்களை சுட்டிக்காட்டி, “உங்கள் வேலை மற்றும் உங்கள் பணத்தை பத்திரமாக வைத்திருங்கள்.” என்று அவர் தனது ஆதரவாளர்களுக்கு மேலும் அறிவுறுத்தினார்.
கியோசாகி சர்வதேச தலைவர்கள் மற்றும் கல்வி முறை நிதி கல்வியறிவை ஊக்குவிக்கத் தவறியதற்காக விமர்சித்தார்.
“பணத்தைப் பற்றி பள்ளி உங்களுக்கு என்ன கற்பித்தது?” என்று கேட்டார்.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி வரவுள்ளதா? பிரபல பொருளாதார எழுத்தாளர் எச்சரிக்கை
