கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து இந்திய-கனடிய அரசியல்வாதியான ரூபி தல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த முடிவு நாட்டின் அடுத்த பிரதமராகும் அவரது முயற்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
தகுதி நீக்கம் குறித்து தல்லா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, இது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு ஊடகங்களுக்கு கசிந்ததாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
தனது அதிகரித்து வரும் ஆதரவு கட்சியில் சில சிலருக்கு அச்சுறுத்தலாக மாறியதாக தல்லா சூசகமாகக் கூறினார்.
வெளிநாட்டு தலையீடு மற்றும் பிரச்சார விதி மீறல்களில் ஈடுபட்டதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவை சக வேட்பாளர் மார்க் கார்னியுடன் விவாதம் செய்வதைத் தடுக்கும் முயற்சிகள் என்று அவர் நிராகரித்தார்.
கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி தலைவர் தகுதிநீக்கம்
