2024ஆம் ஆண்டில் சீனத் தேசிய நிலை புதிய உயர் தொழில் நுட்ப மண்டலங்களின் வளர்ச்சி பற்றிய அறிக்கையைச் சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிப்ரவரி 26ஆம் நாள் வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் அவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பு 19 இலட்சம் கோடி யுவானைத் தாண்டி, முழு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 14% க்கும் அதிகமாக உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கத் துறையில் 2024ஆம் ஆண்டில் இந்த மண்டலங்களின் ஆய்வு நிதி ஒதுக்கீடு மற்றும் அறிவுசார் காப்புரிமையின் எண்ணிக்கை நாட்டின் மொத்த அளவிலும் பாதி பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.