பெண்குழந்தை.

Estimated read time 0 min read

Web team

கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் இரா.இரவி.

கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால்
கதையை முடிக்கும் அவலம் நடந்தது!

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா என்பதை
கருவுற்றோருக்கு அறிவிப்பது குற்றம் என்றானது!

கருக்கலைப்பு கொஞ்சம் குறைந்து விட்டது
கருவிலேயே சிதைப்பது மடமை குற்றம்!

பெரிய உயிரான அன்னைக்கும் ஆபத்து
பெரிய உயிரும் பறிபோன நிகழ்வுகள் உண்டு!

பெண்ணிற்கு சமஉரிமை தருவது இருக்கட்டும்
பெண்ணிற்கு பிறக்க உரிமை தாருங்கள்!

உருவான உயிரை உருக்குலைப்பது முறையோ?
உணராமல் சிலர் குற்றம் புரிந்து வருகின்றனர்!

ஆண்குழந்தை பெற்ற பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்
பெண்குழந்தை பெற்ற எல்லோரும் சிறப்படைந்துள்ளனர்!

ஆண்குழந்தையை ஒழுக்கமாக வளர்ப்பது கடினமானது
பெண்குழந்தையை ஒழுக்கமாக வளர்ப்பது எளிதானது!

கல்வியிலும் பெண்குழந்தைகளே சிறந்து விளங்குகின்றனர்
கடைசிவரை பாசம் பொழிவதும் பெண்குழந்தைகளே!

திருமணமானதும் திரும்பிப் பார்ப்பதில்லை ஆண்
திருமணமானாலும் என்றும் மறக்காதவள் பெண்!

ஆணை வரவென்றும் பெண்ணை செலவென்றும்
அறிவிலித்தனமாக பேசுவதை நிறுத்திடுங்கள்!

உலக அரங்கில் சாதித்து வருகிறாள் பெண்
உயர்வுகள் பல அடைந்து சிறக்கிறாள் பெண்!

மதுவிற்கு அடிமையாகிறான் வளர்க்கும் ஆண்மகன்
மதுவிற்கு அடிமையாவதில்லை வளர்க்கும் பெண்மகள்!

பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பவள் பெண்மகள்
பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பதில்லை ஆண்மகன்!

கருவில் தொலைந்த குழந்தைகள் பல உண்டு
கருவில் உருவான சிசுவை தொலைக்காமல் இருப்போம்.

Please follow and like us:

You May Also Like

More From Author