கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமலாய சுவாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் பலரும் ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்துள்ளார்.
அவரை கோயில் மேலாளர் உட்பட அதிகாரிகள் வரவேற்று கோயிலின் உள்ளே பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் கோயிலின் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகளையும் வழிபாடு செய்தார். கோவிலின் மூலவரான தாணுமலையன் சாமிக்கு பூஜை பொருள்கள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டார். ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பெரிய வெற்றிலை மாலை அணிவித்து பயபக்தியோடு வழிபட்டார்.