செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின் படி தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.
அதன்படி, பாஜக 37 முதல் 43 தொகுதிகளை கைப்பற்றுமென்றும், ஆம் ஆத்மி 32 முதல் 37 தொகுதிகளை வெல்லும் என்றும் காங்கிரஸ் 2 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 35 முதல் 40 தொகுதிகளையும், ஆளும் ஆம் ஆத்மி 32 முதல் 37 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியை கைப்பற்றுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இதே போல் பாஜக 44 தொகுதிகளையும், ஆம்ஆத்மி 26 தொகுதிகளையும், கைப்பற்றுமென சிஎன்என் நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முடிவகள் தெரிவித்துள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 51 முதல் 60 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 10 முதல் 19 தொகுதிகளையும் வெல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
JVC நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 39 முதல் 45 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 22 முதல் 31 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றுமென கூறப்பட்டுள்ளது.