ஃபெண்டனில் என்ற சாக்குபோக்கில் அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் மீது 10விழுக்காடு சுங்க வரியை கூடுதலாக வசூலிக்க அமெரிக்கா பிப்ரவரி முதல் நாள் அறிவித்துள்ளது.
இது குறித்து சீன வணிக அமைச்கத்தின் செய்தித் தொடர்பாளர் 4ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் இச்செயல் உலக வர்த்தக அமைப்பின் விதிகளைக் கடுமையாக மீறியுள்ளது. ஒருதரப்புவாதம் மற்றும் வர்த்தக பாதுகாப்புவாதத்தின் செயல் இதுவாகும்.
சொந்த சட்டப்பூர்வ உரிமைகளைப் பேணிக்காக்க, அமெரிக்காவின் வரி வசூலிப்பு குறித்து உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சை தீர்ப்பு அமைப்பு முறையிடம் சீனா வழக்கு தொடுத்துள்ளது என்றார்.
அதோடு, பிப்ரவரி 10ஆம் நாள் முதல், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பகுதியான இறக்குமதிப் பொருட்களின் மீது கூடுதல் சுங்க வரியை வசூலிக்க சீனா அறிவித்துள்ளது.
நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு மீது 15விழுக்காடு சுங்க வரியைக் கூடுதலாக வசூலிப்பது, கச்சா எண்ணெய், வேளாண் இயந்திரங்கள், பெரிய இடப்பெயர்ச்சி வாகனம், பிக்கப் டிரக் மீது 10விழுக்காடு சுங்க வரியைக் கூடுதலாக வசூலிப்பது முதலியவை அடங்கும்.