ஃபெண்டனில் என்ற சாக்குபோக்கில் அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களின் மீது 10விழுக்காடு கூடுதல் சுங்க வரியை வசூலிக்க அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதற்கான எதிர் நடவடிக்கையைச் சீனா 4ஆம் நாள் அறிவித்ததோடு, உலக வர்த்தக அமைப்பிடம் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது.
சர்வதேச விதிகளின்படி, சீனாவும் அமெரிக்காவும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளாகும். சீனா மீது ஒருதலைப்பட்சமாகக் கூடுதல் சுங்க வரி வசூலிப்பது உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய சட்ட விதிகளை மீறியுள்ளது. ஒருதரப்புவாதம் மற்றும் வர்த்தக பாதுகாப்புவாதத்தின் செயல் இதுவாகும்.
அமெரிக்க சிந்தனை கிடங்கின் கணக்கீட்டின்படி, 2018ஆம் ஆண்டு வர்த்தக போரின் காரணமாக, அமெரிக்க நுகர்வோர்கள் 4000கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள செலவைக் கூடுதலாகச் சுமந்திருந்தனர். மேலும், 2லட்சத்து 45ஆயிரம் வேலை வாய்ப்புகள் இழந்தன. சீனாவின் மீது வர்த்தக கொடுமைப்படுத்துதல் மற்றும் முற்றுகையிடுதல் நடவடிக்கை மேற்கொள்ளும் அமெரிக்கா, நிதிப் பற்றாக்குறையின் குறைப்பை நனவாக்காமல் இருப்பதோடு, முக்கிய வெளிநாட்டுச் சந்தையை இழந்து விநியோக சங்கிலியின் செலவின் அதிகரிப்பை முன்னேற்றியது.
அமெரிக்கா புதிய சுற்று சுங்க வரி போர் தொடுத்தது முட்டாள்தனமான செயலாகும் என்று கடந்த சில நாட்களில், ஐரோப்பிய தலைவர்கள் உள்ளிட்ட பன்னாட்டு மக்கள் அமெரிக்காவை முன்னெச்சரித்துள்ளனர். சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சாராம்சம் என்பது ஒன்றுக்கொன்று நன்மை தந்து கூட்டு வெற்றி பெறுவதாகும். வர்த்தகப் போர் அல்லது சுங்க வரிப் போரில் வெற்றியாளர் எவரும் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்படும்.