தாய்லாந்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு இருந்து நேற்று முன்தினம் ஜெஜு ஏர் விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானத்தில் மொத்தம் 181 பயணம் செய்தனர். இந்த விமானம் தென்கொரியா விமான நிலையத்தில் தரை இறங்க சென்றது. அப்போது திடீரென இந்த விமானம் விபத்துக்குள்ளானது. அதாவது முவான் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இருந்து புகை கிளம்பியது.
ஓடுப்பாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் 179 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரே நாளில் இந்த விமான நிலையத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
இதில் 33000 பேர் உள்ளூர் பயணங்களையும், 34000 பேர் வெளிநாட்டு விமான பயணங்களையும் ரத்து செய்துள்ளதாக ஜெஜு விமான நிலையம் தெரிவித்துள்ளது.