பிரபல ஸ்விக்கி ஆன்லைன் வலைதளத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணி வரையில் 4779 ஆணுறை ஆர்டர் வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று நேற்று இந்த வலைதளத்தில் அதிக அளவில் பால், சிப்ஸ், சாக்லேட், திராட்சை, பன்னீர் போன்றவைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே சமயத்தில் அதிக அளவில் ஆணுறைகளும் ஆர்டர் வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு 2024 ஆம் ஆண்டு பெங்களூரு நகரம் ஆணுறை ஆர்டர் செய்ததில் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் குறிப்பாக இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் அதிகளவிலான ஆணுறைகள் ஆர்டர் வந்ததாகவும் தெரிவித்துள்ளது.