சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பெய்ஜிங்கில் 79ஆவது ஐ.நா. பொதுப் பேரவையின் தலைவர் பிலிமோன் யாங்கைச் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது வாங் யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த மனிதகுலப் பொது எதிர்காலச் சமூகம் என்ற முக்கிய கருத்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, மூன்று பெரிய உலக முன்மொழிவு ஆகியவை, உலக நிர்வாகத்திலும் ஐ.நா.வின் பணிகளிலும் சீனா பங்கெடுக்கும் அடிப்படையையும் மனித குலத்தின் கூட்டு அறைகூவல்களையும் சமாளிப்பதற்கு சீனாவின் அறிவுத்திறமையையும் வழங்கியுள்ளன என்றார்.
மேலும், ஐ.நா.வுடன் இணைந்து, மனிதகுலப் பொது எதிர்காலச் சமூகத்தை முன்னேற்றுவதற்கு சளையாத முயற்சிகளை எடுக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.