நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் .எல்.கோபாலன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் .எல்.கோபாலன் இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
ஆளுநர் இல.கணேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.