சீனாவில் அதிகளவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று அதன் அண்டை நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
இது புதிய வைரஸ் வகை இல்லையென்றாலும், பொதுமக்கள் இடையே பீதி கிளம்பியுள்ளது.
இதன் எதிரொலியாக பெங்களுருவில் ஏற்கனவே முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று முதன்முதலில் பெங்களூரு, ஆமதாபாத் மற்றும் சென்னையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.