போர்ச்சுக்கள் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் சினிமாவிற்கு சிறிது காலம் இடைவெளிவிட்டு முழுவதுமாக கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் 911 GT3R என்ற பிரிவில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி (901) மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.
துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேஸிங் போட்டியில் 992 போர்ஷே பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியது அஜித்குமார் அணி. ஒட்டுமொத்த ரேஸில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி 23-வது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில், போர்ச்சுக்கள் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. போர்ச்சுகல் ரேஸ் பயிற்சியின் போது இந்த தகவலை நடிகர் அஜித்குமாரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், எனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, நான் என்ன செய்கிறேன் என்பதை அறிய விரும்பும் அனைவருக்கும் எனது நன்றி. ” ‘இன்றைய பயிற்சியின் போது கூட எனது கார் விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான காரை மெக்கானிக் குழுவினர் சரி செய்து விட்டனர் என கூறியுள்ளார்.