ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டார்.
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் வரும் 12ஆம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.
பிரான்ஸில் 3 நாட்கள் தங்கும் பிரதமர் மோடி, பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மார்செய்லே நகரில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரக தொடக்க விழாவில் பங்கேற்பார் என்றும், சர்வதேச வெப்ப அணுக்கரு உலை அமைந்துள்ள பகுதியை இருநாட்டு தலைவர்களும் பார்வையிடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வார் என்றும், அமெரிக்காவில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.