டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடத்தப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, டெல்லி சட்டசபை தேர்தலின் போது நலன் சார்ந்த அரசுக்கு எதிரான சூழலை உருவாக்கினோம்.
ஆனால் நாங்கள் நினைத்த அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பை வழங்கவில்லை. அவர்களது கருத்தை மதிக்கிறோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். கடினமான சூழ்நிலையிலும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக பணியாற்றினர்.
ஆனால் இன்னும் அதிக கடின உழைப்பும் போராட்டமும் தேவைப்படுகிறது. மாசுபாடு, யமுனை நதி தூய்மை, மின்சாரம், சாலைகள், குடிநீர் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எழுப்பும் என்று அவர் தெரிவித்துள்ளார்.