ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றிபெற்ற நிலையில், உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 3வது முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உமர் அப்துல்லா சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஜம்மு காஷ்மீர்க்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.